‘மாணவர்களால் ஆசிரியைக்கு’.. ‘வகுப்பறையிலேயே நடந்த அதிர்ச்சி சம்பவம்’..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Nov 13, 2019 04:07 PM
ஆசிரியை ஒருவர் வகுப்பறையிலேயே மாணவர்களால் தாக்கப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள காந்தி சேவா நிகேதன் பள்ளியில் ஆசிரியை ஒருவர் வகுப்பறையிலேயே தாக்கப்பட்டுள்ளார். முதலில் மாணவர்கள் சிலர் வகுப்பறையில் ஆசிரியையுடன் சண்டையிடுகின்றனர். அதில் ஒரு மாணவர் அவருடைய கைப்பையைத் தூக்கி எறிகிறார். பின்னர் ஆசிரியையை தாக்கத் தொடங்கும் அந்த மாணவர் அருகிலிருந்த சேர் ஒன்றையும் எடுத்து அவரை அடிக்கிறார். இந்த சம்பவத்தின்போது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்துப் பேசியுள்ள அந்தப் பள்ளியின் மேலாளர், ஆசிரியை மமதா துபே மாணவர்களை அநாதைகள் எனக் குறிப்பிட்டு அடிக்கடி திட்டியதால் ஆத்திரமடைந்த மாணவர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறியுள்ளார். ஆனால் அதை மறுத்துள்ள ஆசிரியை மமதா தன்னை பணியிலிருந்து நீக்குவதற்காக மேலாளர் முயற்சி செய்ததாகவும், அது முடியாததால் தனக்கு தொந்தரவு கொடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.
#WATCH A child welfare official, Mamata Dubey, was thrashed by students at Gandhi Sewa Niketan in Raebareli, yesterday. pic.twitter.com/ZCBGJeZ8Z3
— ANI UP (@ANINewsUP) November 12, 2019
