'ஒரு நொடியில் அறுந்த சாகசக் கயிறு.. 3வது மாடியில் இருந்து விழுந்து' .. 11 வயது மாணவிக்கு நேர்ந்த கதி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Nov 14, 2019 11:29 PM

சத்தீஸ்கரில் கயிற்றில் கட்டி இறங்கும் சாகசப் போட்டியில் 4-ஆம் வகுப்பு பயிலும் 11 வயது மாணவி, 3வது மாடியில் இருந்து விழுந்துள்ள சம்பவம் பதற வைத்துள்ளது.

Raipur School girl falls from 25 feet height and injured

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்பூர் மாவட்டத்துக்குட்பட்ட பள்ளி ஒன்றில் பயிலும் கர்திஷா என்கிற 4-ஆம் வகுப்பு மாணவியை, கயிறை கட்டிக்கொண்டு இறங்கும் சாகசப் போட்டியில் கலந்துகொள்ள பள்ளி நிர்வாகம் தயார் செய்துள்ளது. ஆனால் அம்மாணவி அதற்காக பயத்தில் மறுத்ததாகத் தெரிகிறது.

எனினும் மானவிக்கு தைரியம் கூறி அப்பள்ளி நிர்வாகம் அவரை இந்த போட்டியில் பங்கேற்க வைத்துள்ளது. அப்போது மெதுமெதுவாக கயிற்றின் மூலம் இறங்கிக் கொண்டிருந்த மாணவி, திடீரென கயிறு அறுந்து 3வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதைப் பார்த்த மாணவியின் தாயார் பதறி அடித்துக்கொண்டு ஓடி சிறுமியை தூக்கியுள்ளார்.

ஆனால் சிறுமி மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இதனையடுத்து ஊடகங்கள் வாயிலாக இந்த செய்தி பரவத் தொடங்கியதும், மாவட்டக் கல்வி அலுவலர் அளித்த புகாரின் பேரில், உரிய நடவடிக்கை எடுக்க அம்மாவட்ட ஆட்சியர் பாரதிதாசனுக்கு அம்மாநில முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Tags : #SCHOOLSTUDENT #GIRL