‘ஜஸ்ட் 3 செகண்ட்தான்’... ‘விராத் கோலியை’... ‘ஓகே சொல்ல வைத்த கங்குலி’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Nov 02, 2019 11:40 PM
பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற அடுத்த நாளிலேயே, சவுரவ் கங்குலி எடுத்த முயற்சிக்கு, இந்திய அணி கேப்டன் விராட் கோலியை, மூன்றே விநாடிகளில் சம்மதம் தெரிவிக்க வைத்துள்ளார்.
![just 3 seconds virat kohli said ok to bcci president ganguly just 3 seconds virat kohli said ok to bcci president ganguly](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/just-3-seconds-virat-kohli-said-ok-to-bcci-president-ganguly.jpg)
கடந்த ஒருவாரத்திற்கு முன்னர் தான் பிசிசிஐ தலைவராக, முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பதவியேற்றார். பதவியேற்ற மறுநாளே, இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி மற்றும் துணை கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இதர நிர்வாகிகள் அனைவரையும் ஒன்று திரட்டி, அவசர கூட்டம் ஒன்றை நடத்தி, அணி மேம்பாடு குறித்து கலந்துரையாடினார். இந்நிலையில், இந்த கூட்டத்தின்போது நடைப்பெற்ற சுவாரஸ்யமான தகவல் ஒன்றை கங்குலி தற்போது பகிர்ந்துள்ளார்.
அதாவது, கங்குலி இந்திய அணியைப் பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க வைக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பதவி ஏற்ற மறுநாளே கேப்டன் கோலியைச் சந்தித்து ஒருமணிநேரம் பேசியுள்ளார் கங்குலி. அப்போது இந்திய அணி, பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதுதான் கங்குலியின் முதல் கேள்வியாக, விராத் கோலியிடம் கேட்கப்பட்டுள்ளது. மூன்று வினாடிகளில் அதற்கு, `அதைச் செய்யுங்கள்' எனக் கோலி சம்மதம் தெரிவித்து பதில் கொடுத்ததாக, கங்குலி மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
ஐசிசியால் பகலிரவு டெஸ்ட் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டபோது அதில் விளையாட இந்தியா மறுத்துவந்தது. இந்நிலையில், தற்போது கோலி சம்மதம் தெரிவித்ததையடுத்து, பிங்க் நிற பந்தில், இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)