'ஏடிஎம்மில் கொள்ளையடிக்கப் போன'... 'திருடனுக்கு நேர்ந்த பயங்கரம்'... வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Oct 09, 2019 10:34 PM

முகத்தை மறைத்துக்கொண்டு ஏடிஎம் மெஷினை உடைக்க, நாட்டு வெடிகுண்டு வைத்த திருடன், அந்த குண்டு வெடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Thief blows himself up as he plant explosives on atm

ரஷ்யாவில் செரபோவெட்ஸ் என்ற நகரில், செபர் வங்கியின் ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. இந்த ஏடிஎம்மில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க, முகத்தை மறைத்துக்கொண்டு திருடன் ஒருவன் புகுந்துள்ளான். அப்போது, ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க, அவன் முயற்சி செய்துள்ளான். பின்பு தான் கொண்டு வந்த பையிலிருந்து, வீட்டில் செய்த நாட்டு வெடிக்குண்டு ஒன்றை அந்த திருடன் எடுத்து, ஏடிஎம் இயந்திரத்தை உடைப்பதற்காக அதில் வைத்துக்கொண்டு இருந்தான்.

அப்போது திடீரென நாட்டு வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன், திருடன் மீதே வெடித்து சிதறியது. இதில் ஏடிஎம் மையம் சுக்கு நூறாகியது. வெடிகுண்டு வெடித்ததில், சம்பவ இடத்திலேயே திருடன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவத்தை பதிவு செய்துக்கொண்டிருந்த சிசிடிவி கேமராவும் சேதமடைந்தது. இந்நிலையில், வெடிகுண்டு வெடித்ததால், அக்கம் பக்கத்தினர் பயந்து, அலறினர். திருடனுடன் வந்த மற்றொரு திருடன் தப்பியோடியுள்ளான். இருவர் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #RUSSIA #BOMB #EXPLOSIVE