ரூபாய் 699-க்கு மொபைல்..'இலவச' டேட்டா..தீபாவளிக்கு செம 'பரிசு' கொடுக்கும் ஜியோ!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Manjula | Oct 01, 2019 09:06 PM

இந்தியாவின் மிகப்பெரிய நெட்வொர்க் நிறுவனங்களில் ஒன்றான ஜியோ தீபாவளியை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு ஆபர் ஒன்றை அறிவித்துள்ளது.அதன்படி ரூ.1500 மதிப்பு கொண்ட 4G LTE -ஐ ஆதரிக்கும் ஸ்மார்ட் பியூச்சர் Jio Phone மொபைலை வெறும் 699 ரூபாய்க்கு கடைகளில் வாங்கிக்கொள்ளலாம்.இதற்கு எக்ஸ்சேஞ் போன்ற எந்த நிபந்தனைகளும் கிடையாது.

Reliance Jio announces Diwali offer, Details Here!

இலவச டேட்டா:

இதுதவிர 700 ரூபாய்க்கான டேட்டா ஆபரையும் ஜியோ வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் நிகழ்த்தும் முதல் ஏழு ரீசார்ஜ்களின் உதவியோடு 99 ரூபாய் மதிப்பிலான டேட்டா மொபைலுக்கு இணைக்கப்படும்.

சிறப்பம்சங்கள்:

512MB அளவிலான ரேம்(RAM) கொண்டுள்ள இந்த போன் 4 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பகத்தை கொண்டுள்ளது, இது மைக்ரோ எஸ்.டி கார்டு வழியாக 128 ஜிபி வரை விரிவாக்க கூடிய ஆதரவையும் வழங்குகிறது.வைஃபை(WIFI) ஆதரவு கொண்டுள்ள இந்த போன் ஆனது ஒரு 2,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

கூகுள் அசிஸ்டண்ட்:

இந்த மொபைலில் கூகுள் அசிஸ்டண்ட்டை பயன்படுத்தலாம்.இதில் 22 இந்திய மொழிகளுக்கான ஆதரவு உள்ளது.

ஹெச்.டி டிவி:

இதன் proprietary cable மூலமாக mirror content விருப்பத்தை செயல்படுத்தி இதை ஒரு HD TV உடன் இணைக்கலாம். மேலும், பேஸ்புக், கூகுள் மேப்ஸ், வாட்ஸ்ஆப் மற்றும் யூடியூப் போன்ற ஆப்ஸ்களுக்கான ஆதரவும் ஜியோ போனில் உள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள தன்னுடைய வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தவும், 2ஜி வாடிக்கையாளர்களை 4ஜி வாடிக்கையாளர்களாக மாற்றும் பொருட்டும் இந்த ஆபரை ஜியோ வழங்குவதாக கூறப்படுகிறது.