‘திடீரென கேட்ட பயங்கர சத்தம்’... ‘வெடித்து சிதறிய கதவுகள்’... ‘டிவி பார்த்துக் கொண்டு இருந்தபோது’... ‘சென்னையில் நடந்த சோகம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 07, 2019 11:38 AM

சென்னையில், திடீரென வீட்டில் இருந்த கதவுகள் வெடித்துச் சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The doors suddenly exploded in chennai no casualties

கிண்டி நேரு நகர் வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவில் வசித்துவருபவர், மாரிமுத்து (60). இவர்,கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று இரவு, தனது வீட்டின் கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டு, மருமகள் மற்றும் பேரனுடன் டி.வி. பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது வீட்டில் உள்ள முன்பக்கம், சமையல் மற்றும் படுக்கை அறைகளில் இருந்த கதவுகள் திடீரென வெடித்துச் சிதறின. அதுவும் தீ விபத்து எதுவும் நடக்காமலேயே கதவுகள் வெடித்து சிதறியதால், வீட்டிலிருந்த மாரிமுத்து உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் அலறியடித்தப்படி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். பயங்கர சத்தம் கேட்டதால், அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்த அவர்கள், தடவியல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த தடவியல் வல்லுநர்கள், சோதனை மேற்கொண்டனர். வெகுநேரம் அடுப்பில் தண்ணீரை சுடவைத்துக்கொண்டு, அதனை கவனியால் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், கியாஸ் அடுப்பு அணைந்து, எரிவாயு மற்றும் கொதிக்கும் வெந்நீரால் ஏற்பட்ட நீராவியுடன் கலந்து, அழுத்தம் காரணமாக, கதவுகள் வெடித்து சிதற வாய்ப்புள்ளதாக தடவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். மேலும் எல்லா அறைகளும் காற்று புகாத அளவு அடைத்து இருந்ததால், எரிவாயு வெளியறே முடியாமல், இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் உறுதியாக எதனால் நடந்தது என்பது தெரியாததால், இதுகுறித்து விசாரணை நடைப்பெற்று வருகிறது. கதவுகள் சிதறியதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை.

Tags : #CHENNAI #EXPLODE #DOORS