“வந்தாச்சு வாடகை ஸ்கூட்டர்!”.. “ஆப் டவுன்லோடு பண்ணுங்க.. 5 ரூபாய்க்கு புக் பண்ணுங்க!”.. சென்னை மெட்ரோ அதிரடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jan 23, 2020 11:17 AM

சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம், ஃப்ளை (FLY) நிறுவனத்துடன் இணைந்து புதிய எலக்ட்ரிக் பைக் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

chennai metro rail ltd introduce FLY electric scooter service

முன்னொரு காலத்தில் இருந்த வாடகை சைக்கிள் வசதியெல்லாம் இப்போது இல்லையே என்று ஆதங்கப்பட்ட பலரும் இந்த சேவையை வரவேற்றுள்ளனர். கிண்டி, ஆலந்தூர், நந்தனம், பரங்கிமலை உள்ளிட்ட 4 ரயில் நிலையங்களிலும் முற்றிலுமாக மின்சாரத்தால் இயங்கக் கூடிய இந்த ஃப்ளை நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த வாகனங்களை 5 ரூபாய்க்கு புக்கிங் செய்யலாம். பின்னர் ஒரு நிமிடத்துக்கு 1 ரூபாய் என்கிற முறையில் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கும் FLY செயலியை பதிவிறக்கம் செய்துவிட்டு, பின்னர் அதில் நம் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்துவிட்டு, ஒரு புகைப்படத்தை இணைத்து, வாகனத்தின் QR Code-ஐ ஸ்கேன் செய்தால் வாகனம் தயார்.

அதுமட்டுமல்லாமல்  இருசக்கர வாகனத்துக்கு அத்தியாவசியமான ஹெல்மெட்டும் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. தவிர, சிறப்பு சலுகையாக 100 ரூபாய் வாலட் சலுகையும்  தற்போது வழங்கப்படுகிறது. விரைவில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் அறிமுகப்படுத்தப் படவிருக்கிற காற்று மாசு, ஒலி மாசு இல்லாத, சாவி கூட இல்லாத இந்த மின்சார ஸ்கூட்டரை மக்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பயன்படுத்தி முடிந்ததும், அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு ஃப்ளை சேவை மையத்தில் டிராப் செய்துவிடலாம்.

சாவி இல்லாத இந்த மின்சார ஸ்கூட்டரை லாக் செய்யவும், அன்லாக் செய்யவும் மொபைல் செயலி மட்டுமே உதவும். வாகனத்தை இயக்காமல் நிறுத்தி வைக்கும் பட்சத்தில் நிமிடத்துக்கு 50 பைசா கட்டணம் செலுத்த வேண்டும்.

Tags : #RAILWAY #METRO #CMRL