'168 ரயில்கள் ரத்து...' 'ரிசர்வ் பண்ணின டிக்கெட்ஸ் கேன்சல் பண்ணியாச்சு...' நாளை முதல் ரத்து என ரயில்வே துறை அறிவிப்பு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் பீதியால் ரயில்வே துறை நாடு முழுவதும் 168 ரயில்களை இயக்க நாளை முதல் தடை விதித்துள்ளது. மேலும் இரயில் முன்பதிவு டிக்கெட்களை பயணிகள் கேன்சல் செய்து வருகின்றனர்.
சீனாவை அடுத்து பல உலக நாடுகளுக்கு பரவி வருகிறது கொரோனா வைரஸ். இந்தியாவில் தற்போது வரை 173 மக்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது மற்றும் 3 பேர் இறந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மாநில பல்வேறு வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. பள்ளி கல்லூரிகளுக்கு மார்ச் 31 தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் வணிக வளாகங்களையும் மூட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதை தொடர்ந்து கொரோனா அச்சத்தின் விளைவாக இரயில் முன்புதிவு செய்திருந்த பயணிகள், டிக்கெட்டுகளை கேன்சல் செய்துள்ளனர். மேலும் இரயில் நிலையங்களில் பயணிகள் வருகை குறைந்து.
எனவே நாடு முழுவதும் 168 ரயில்களின் சேவை நாளை முதல் வரும் 31ம் தேதி வரை இயக்கப்படவிருந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
மேலும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பின் போது ரயில்களில் பயணம் செய்வதை 2 வாரத்துக்கு பொதுமக்கள் தவிர்க்கவும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் உள்நாட்டு விமான பயணிகளை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.
இதுவரை அதிகார பூர்வமாக மருந்துகள் கண்டுபிடிக்காத சூழலில் தற்காப்பு செயல்கள் மட்டுமே கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்க ஒரே வழியாக இருக்கும் என மருத்துவ குழு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்