'எவ்வளவு நாள் ஆச்சு'... 'குடும்பத்தை பார்க்க ஓமனில் இருந்து வந்த வாலிபர்'...எதிர்பாராத திருப்பம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஓமன் நாட்டிலிருந்து ஊருக்கு வந்த வாலிபர் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் ரத்த மாதிரி சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் அரபு நாடுகளில் அதிகமாக வேலை செய்து வருகிறார்கள். தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளிலிருந்து குமரி மாவட்டம் வருபவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டில் ஏற்கனவே 3 பேர் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்குப் பிறகு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று குளச்சல் பகுதியைச் சேர்ந்த 26 வயது வாலிபர் ஒருவர் ஓமன் நாட்டிலிருந்து ஊருக்கு வந்திருந்தார். நீண்ட நாள் கழித்து குடும்பத்தைப் பார்ப்பதற்காக வந்த அவருக்கு, கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்ற சந்தேகத்தில் பரிசோதனைக்காக கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது ரத்தமாதிரிகள் பரிசோதனைக்காகச் சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இன்று மதியம் அதற்கான முடிவுகள் கிடைக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ள வாலிபரை மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள். கொரோனா வார்டுக்கு வெளியே தினமும் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி நடந்து வருகிறது. தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.