‘காவலரின் காலில் விழுந்து பரபரப்பை ஏற்படுத்திய ஆளுங்கட்சி MLA!’... வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாசீனாவில் உருவாகி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவைக் கண்டு பயப்படாதோரே இல்லை என்று சொல்லலாம். இந்த நோய் பரவுவதை தடுக்கும் விதமாக இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து, கடைகளும், வணிக வளாகங்களும் மூடப்பட்டுவிட்டன.

ஆனால் அயராது உழைத்துக் கொண்டு மக்களை கொரோனாவில் இருந்து தற்காக்க வேண்டிய சூழலில் மருத்துவர்களுக்கு அடுத்தபடியாக போலீஸாரே முன்னிற்கின்றனர். அதனால் அத்தகைய போலீஸாருக்கு நன்றி சொல்லும் விதமாக ஆந்திராவில் ஆளுகிற ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த
எம்.எல்.ஏ செட்டி பால்குனா போலீஸாரின் காலில் விழுந்து நன்றி சொன்ன காட்சிகள் வீடியோவாக வலம் வந்து நெகிழவைத்துள்ளன.
Tags : #CORONA #CORONAVIRUS #CHETTYPALGUNA #MLA #POLICE #ANDHRAPRADESH
