காய்ச்சல் வந்ததால் கொரோனா 'பீதி' ... மூலிகை மருந்து குடித்த குடும்பம் ... இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்உசிலம்பட்டி அருகே கொரோனா உள்ளதாக சந்தேகத்தின் பெயரில் மூலிகை குடித்த தாய் மற்றும் மூன்று மகன்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள குன்னூத்துப்பட்டியை சேர்ந்தவர் கவிதா. இவருக்கு மொத்தம் மூன்று மகன்கள். மூன்று மகன்களில் ஒருவருக்கு காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காய்ச்சலாக இருக்குமோ என்று பயந்த கவிதா, தனது மூன்று மகன்களுக்கும் மூலிகை மருந்து ஒன்றை கொடுத்து தானும் குடித்துள்ளார்.
மூலிகை மருந்து குடித்த நான்கு பேரும் சிறிது நேரத்தில் மயக்கமடைந்தனர். இந்நிலையில் உடனடியாக அவர்கள் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிட்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிட்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று உள்ள சந்தேகத்தின் பெயரில் குடும்பத்திலுள்ள நான்கு பேரும் விஷம் குடித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
