‘துபாயிலிருந்து மதுரை வந்த 143 பயணிகள்’... ‘கண்காணிப்பு மையத்திற்கு செல்ல மறுப்பு?’... ‘விமானநிலையத்தில் நடந்த பரபரப்பு’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 19, 2020 09:03 PM

துபாயில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் வந்த 143 பயணிகளில் பெரும்பாலவானவர்கள் கண்காணிப்பு மையத்திற்கு செல்ல மறுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Madurai passengers coming from Dubai not ready to taken test

துபாயில் இருந்து பயணிகள் விமானம் இன்று மதுரை வந்தடைந்தது. விமானத்தில் 143 பயணிகள் வந்துள்ளனர். வளைகுடா நாடுகளில் கொரோனா பாதித்துள்ளதால், பயணிகள் அனைவரையும் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். பயணிகளை அழைத்துச் செல்ல பேருந்து கொண்டு வரப்பட்டது. 

அவர்களைத் தொடர்ந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்காக, மதுரை புறநகர் பகுதிகளில் படுக்கை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அறை தயார் செய்யப்பட்டது. எனினும், கொரோனா பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து துபாயிலிருந்து வந்த பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.

நோய் அறிகுறி இருப்பவர்களை மட்டும் அழைத்து செல்ல வேண்டும் என்றும், மற்றவர்களை வீட்டிற்கு அனுப்புமாறு கோரிக்கை விடுத்து பேருந்தில் ஏற மறுப்பு தெரிவித்தனர்.

சிறிது நேரம் வாக்குவாதத்திற்கு பின்பு அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து துபாயில் இருந்து வந்த பயணிகளில் சிலர் பரிசோதனை மையத்துக்கு பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, தற்காலிக முகாம் அமைந்துள்ள இடத்தின் அருகில் உள்ள கிராம மக்கள், மருத்துவ முகாமுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Tags : #MADURAI #DUBAI #CORONAVIRUS #TEST