'இங்க பனிப்பொழிவு அதிகமா இருக்கு' ... சீனாவின் தற்போதைய நிலை என்ன? ... தமிழில் விளக்கும் சீன பெண்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith | Mar 20, 2020 07:17 PM

கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த சீனாவின் தற்போதைய நிலைமை எப்படியுள்ளது என்பது குறித்து அங்குள்ள பெண் ஒருவர் தமிழில் விளக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

A Chinese woman explains current situation of China

சீன நாட்டின் வுஹான் மாகாணத்தில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஏழாயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மட்டும் மூவாயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக சீனா இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. கொரோனாவிற்காக திறக்கப்பட்ட 16 தற்காலிக மருத்துவமனைகளும் மூடப்பட்டன. சீனாவின் தற்போதைய நிலை குறித்து சீனாவில் உள்ள பெண் ஒருவர் தமிழில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், 'பெய்ஜிங் பகுதியில் தற்போது பனிப்பொழிவு இருந்து வருகிறது. பேருந்துகள் வழக்கம் போல இயங்க ஆரம்பித்துள்ளது. ஆனால் பொது வெளிகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக தான் இருக்கிறது. வெளியில் வரும் மக்கள் கையுறை மற்றும் முகக் கவசம் அணிந்து கொண்டு வெளியில் வருகின்றனர்' என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அந்த பெண் மேலும் கூறுகையில், 'சீனாவில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சில இந்திய ஊடகங்கள் கவலைப்பட்டது. ஆனால் கவலைப்படும் அளவுக்கு இங்கு உணவு பற்றாக்குறை இல்லை. கடையில் ஒரு பலகை வைத்து சில மீட்டர் இடைவெளியில் பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு விற்கப்பட்டு வருகின்றது. சீனா அரசும், மக்களும் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். எங்கள் நாடு  நல்ல நிலைக்கு திரும்ப வேண்டிய அனைத்து நாட்டிற்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்' என்றார்.

Tags : #CHINA #CORONA VIRUS