'கொரோனா'வுல இருந்து நம்மள காப்பாத்திட்டு இருக்காங்க ... இவங்க தான் ரியல் ஹீரோக்கள் ... ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன #CORONAFIGHTERS!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காத்து வரும் மருத்துவர்கள் மற்றும் இதற்காக பணிபுரியும் ஊழியர்களுக்கும் இணையதளங்களில் பொது மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தொற்று மூலம் மிகுந்த அளவில் பாதிப்பு ஏற்பட்டு மக்கள் அனைவரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 7000 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த வடமேற்கு சீனா தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. 16 தற்காலிக மருத்துவமனைகள் சீனாவில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது அனைத்து தற்காலிக மருத்துவமனைகளும் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட மக்களை இரவு பகல் பாராமல் சிகிச்சையளித்து வரும் மருத்துவர்களை பாராட்டி #CoronaFighters என்ற ஹேஸ்டேக்கை இணையதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க கிருமி நாசினிகளை தெளித்து பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கும் , அதே போல பேருந்து, விமானம் ஆகியவற்றை சுத்தம் செய்து வரும் தொழிலாளர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
🙏🏼🙏🏼Salute to all healthcare professionals across the 🌎 #Coronafighters pic.twitter.com/DpTkCpD8Ls
— Dr.Saloni (@Drskg4) March 17, 2020
