'ஐடியா இருந்தா குடுங்க' ... 'டெஸ்ட் பண்ணி அங்கீகாரம் குடுக்குறோம்' ... சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Mar 17, 2020 04:59 PM

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறுவோர் அதனை பரிசோதனை மூலமாக நிரூபித்தால் அதற்கான அங்கீகாரம் அளிக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

TN Health Minister announces a new plan for Corona Treatment

சென்னை கிண்டியிலுள்ள பல்கலைக்கழகத்தில் உலகளவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் சர்வதேச மருத்துவர்களுடன் உலகம் முழுவதும் கையாளும் மருத்துவ முறைகள் என்ன என்பது குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. இதற்கு பின் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளின் கட்டமைப்புகளை மேம்படுத்தவும், தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

அமைச்சர் மேலும் கூறுகையில் கொரோனா வைரசிற்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறுவோர் சுகாதாரத்துறையை அணுகி பரிசோதனை செய்து பின்னர் நிரூபிக்கப்பட்டால் அதற்கான அங்கீகாரம் அளிக்கப்படும் என தெரிவித்தார்.

Tags : #VIJAYBASKAR #TAMILNADU #CORONA VIRUS