‘கொரோனா அச்சம்’!.. ‘எங்க வீரர்கள் பாதுகாப்புதான் முக்கியம்’.. ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகும் முதல் நாடு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா அச்சம் காரணமாக ஒலிம்பிக் போட்டிகளில் தங்களது நாடு பங்குகொள்ளப்போவதில்லை என கனடா தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உலக நாடுகள் அனைத்தும், ஊரடங்கு உத்தரவு, எல்லைகள் மூடல், போக்குவரத்து ரத்து என பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த வைரஸால் பல நிகழ்ச்சிகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் வரும் ஜூலை மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்பட உள்ளன. ஆனால் தற்போது அனைத்து நாடுகளிலும் கொரோனா அச்சுறுத்தல் நிலவி வருவதால், தங்கள் நாட்டு வீரர்களை ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுப்புவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த போட்டிகளை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும் என அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
இதில் கனடா நாடு ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகிக்கொள்ளவதாக தெரிவித்துள்ளது. தாங்கள் நாட்டு வீரர்களின் பாதுகாப்பு முக்கியம் என்று தெரிவித்துள்ள கனடா, கொரோனா அச்சம் முற்றிலும் மறையும் வரை ஒலிம்பிக் போட்டிகளை நடத்த வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளது.
