மூன்று மாதமாக அச்சுறுத்திய 'கொரோனா' ... இறுதியில் சீனாவிற்கு கிடைத்த சிறிய ஆறுதல்!
முகப்பு > செய்திகள் > உலகம்டிசம்பர் மாதத்துக்கு பிறகு சீனாவில் முதல் முறையாக புதிதாக நேற்று யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் முதல் சீனாவிலுள்ள வுஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தது. இந்த வைரஸ் மூலம் சீனாவில் மட்டும் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வந்தனர். மூன்று மாதங்களுக்கு மேலாக கடுமையாக அச்சுறுத்தி வந்த கொரோனா வைரசிலிருந்து சில தினங்களுக்கு முன்பிலிருந்து சீனா இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் தற்போது ஒரு நற்செய்தியாக நேற்று ஒரு நாள் முழுவதும் சீனாவில் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என சீன அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சுமார் 80,000 பேர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
