‘இனி மற்ற நெட்வொர்க் போன்களுக்கு’.. ‘அழைத்துப் பேசினால் கட்டணம்’.. ‘பிரபல நிறுவனத்தின் புதிய அறிவிப்பு’..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Oct 09, 2019 06:13 PM
ஜியோவிலிருந்து மற்ற நெட்வொர்க் போன்களுக்கு பேசினால் இனி கட்டணம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் போன்களுக்கு அழைத்துப் பேசினால் இனி நிமிடத்திற்கு 6 காசுகள் கட்டணமாக விதிக்கப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கு இணையான டேட்டா கூடுதலாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஜியோ வாடிக்கையாளர்களிடம் இதுவரை இன்டர்நெட் சேவைக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது வரை இந்தியாவிற்குள் எந்த நெட்வொர்க்கிற்கு அழைத்தும் அவர்கள் இலவசமாக பேச முடியும். ஜியோ நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளில் இண்டர்கனெக்ட் யூசேஜ் சார்ஜாக ஏர்டெல், வோடஃபோன் போன்ற நிறுவனங்களுக்கு ரூ. 13 ஆயிரத்து ஐநூறு கோடி செலுத்தியுள்ளதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
Tags : #JIO #OUTGOING #CALL #OTHER #NETWORKS #CHARGE #AIRTEL #VODAFONE #USERS