'பசு மாட்டை' ரூமில் அடைத்து 'பாலியல் வன்புணர்வு'...'சிக்கிய இளைஞர்கள்'... திருப்பூரை அதிரவைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Sep 03, 2019 03:38 PM

பசு மாட்டை கடத்தி சென்று, 3 இளைஞர்கள் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் திருப்பூரை அதிரச்செய்துள்ளது.

3 migrant workers from Odisha caught for sexually assaulting cow

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. விவசாயியான இவர் சொந்தமாக பசு மாடு ஒன்றை வைத்துள்ளார். ஆனால் அந்த பசு மாட்டிற்கு அவ்வப்போது உடல்நலம் சரியில்லாமல் போக, கந்தசாமி குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார். இரவு நேரத்தில் நன்றாக இருக்கும் மாடு காலை ஆனதும் பலவீனமாக மாறியுள்ளது. இது அவருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே மருத்துவரிடம் பசு மாட்டை காட்ட நினைத்த அவர், நேற்றிரவு வழக்கம்போல பசுமாட்டை வெளியே கட்டிவிட்டு தூங்க சென்றுள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் திடீரென மாடு கத்தும் சத்தம் கேட்டு விழித்த கந்தசாமி, வெளியே சென்று மாட்டை பார்த்தார். ஆனால் மாடு அங்கு இல்லாததை கண்டு அதிர்ந்த அவர், பல இடங்களில் தேட ஆரம்பித்தார்.

அப்போது அருகில் இருந்த கோழிப்பண்ணை அறையில் இருந்து மாட்டின் சத்தம் கேட்க, உடனே உள்ளே சென்று பார்த்தார். அப்போது அவர் கண்ட காட்சி அவரை அதிரச்செய்தது. அந்த அறையில் 3 வட மாநில இளைஞர்கள் சேர்ந்து பசு மாட்டினை பாலியல் வன்புணர்வு செய்து கொண்டிருந்தார்கள். இதையடுத்து கந்தசாமி கூச்சல் போட அங்கு திரண்ட அக்கம் பக்கத்தினர், அந்த இளைஞர்கள் 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து, தர்ம அடி கொடுத்து பல்லடம் போலீசில் ஒப்படைத்தார்.

விசாரணையில் 3 பேரும் அருகில் உள்ள கல்குவாரியில் வேலை செய்பவர்கள் என்பதும், 3 பேருமே வடமாநில இளைஞர்கள் என்பதும் தெரியவந்தது. தினமும் இரவு பசு மாட்டினை கடத்தி சென்று, அருகில் இருக்கும் கோழிப்பண்ணை அறையில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்தது விசாரணையில் தெரியவந்தது. வட மாநில இளைஞர்கள் சேர்ந்து பசு மாட்டை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் திருப்பூரில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SEXUALABUSE #ODISHA #COW #MIGRANT WORKERS #THIRUPPUR