‘என்ன அரெஸ்ட் பண்ணுங்க.. இல்லனா அவ்ளோதான்’.. ‘அதிகரிக்கும் போதை ஆசாமிகளின் தொல்லை’.. ஆக்ஷனில் இறங்கும் காவல்துறை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குடிபோதையில் வந்த இளைஞர் ஒருவர் காவல் நிலையத்துக்குள் புகுந்து காவல் நிலைய உதவி ஆய்வாளரை தகாத வார்த்தைகளில் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தமான் தீவைச் சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் பெத்துகுமார்(34). இவர் கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவர் மது அருந்திவிட்டு கோவை காந்திபுரத்தில் தகராறில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
அப்போதுதான் கோவை, காட்டூர் காவல் நிலையத்தில் பனிபுரிந்துவரும் மகேந்திரன் என்பவரிடம் தகராறில் ஈடுபட்ட பெத்துகுமார், `என்னை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வில்லை என்றால், கொன்று விடுவேன்' என்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர்.
இதேபோல், கோவை டெக்ஸ்டூல் பாலம் மற்றும் கணபதி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர்களிடம் தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
