2-வது 'திருமணத்துக்கு' தயாரான மருமகன்... மகளுடன் சேர்ந்து தந்தை செய்த 'விபரீத' காரியம்... அதிர்ச்சியில் 'உறைந்த' ஊர் மக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Feb 13, 2020 12:10 AM

கடலூர் மாவட்டம் கண்ணாரபேட்டை பகுதியை சேர்ந்தவர் பாவாடைசாமி(58) இவரது மகள் சங்கீதா என்பவருக்கும் புதுவை பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் ராஜேஷ் கூடுதலாக சங்கீதா வீட்டினரிடம் வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது.

Father and Daughter Suicide in Cuddalore, Police Investigate

இதனால் ராஜேஷ்-சங்கீதா இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கணவரை விட்டு பிரிந்து தந்தை வீட்டிற்கு சங்கீதா வந்து விட்டார். தொடர்ந்து கணவன்-மனைவி இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. இதற்கிடையில் ராஜேஷுக்கு அவரது உறவினர்கள் 2-வது திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வந்ததாக தெரிகிறது. இந்த தகவல் சங்கீதா குடும்பத்தினருக்கும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை பாவாடைசாமி, சங்கீதா இருவரும் வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் அருகில் இருந்த சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு ஆரம்ப முதலுதவி அளிக்கப்பட்டது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அவர்களை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதைக்கேட்ட உறவினர்கள் அவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இருவரின் மரணம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  

Tags : #POLICE