போலீசிடமிருந்து தப்பிக்க '25 அடி' உயரத்திலிருந்து 'குதித்த ரவுடி'... காலில் 'மாவுக்கட்டு'... எங்கள ஏன்யா 'முறைச்சு' பாக்குறீங்க... 'சத்தியமா' இந்த மாவுக்கட்டுக்கு நாங்க 'பொறுப்பில்லை'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்விழுப்புரம் மாவட்டத்தில் கத்தியைக் காட்டி மாமூல் வசூலில் ஈடுபட்ட ரவுடி போலீசிடம் இருந்து தப்பிப்பதற்காக 25 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து குதித்து காலை உடைத்துக் கொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பல கூட்டுரோட்டில், வியாபாரிகளிடம், குயிலாப்பாளையத்தைச் சேர்ந்த டான் உதயன் என்பவர் கத்தியைக் காட்டி மிரட்டி மாமூல் வசூல் செய்துள்ளார்.
இந்நிலையில், சுரேஷ் என்ற வியாபாரியிடம் மாமூல் கேட்ட போது அவர் தர மறுக்கவே, அவரை கத்தியால் வெட்ட முயன்றதாகவும், அருகில் இருக்கும் சரக்கு வாகனத்தின் கண்ணாடியை உடைத்ததாகவும் புகார் கூறப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் ரவுடி உதயனை தேடி வந்தனர்.
அவர் மாட்டுக்காரன் சாவடி அருகே உள்ள 25 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் பதுங்கியிருப்பதாக தகவல் தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் உதயனைப் பிடிக்க நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறியுள்ளனர்.
அப்போது போலீசாரிடமிருந்து தப்பிக்க உதயன் 25 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்த குதித்துள்ளார். இதில் அவரது காலில் பல்வேறு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் சேர்த்து மாவுக்கட்டு போட்டுள்ளனர்.
