ஷ்ஷ்... இப்பவே 'கண்ணை' கட்டுதே... காயத்தால் அவதிப்படும் 'முன்னணி' ஆல்ரவுண்டர்... 'பிரபல' அணிக்கு ஏற்பட்ட இடியாப்ப சிக்கல்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமார்ச் 29-ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளன. இதையொட்டி பிரபல அணிகள் பலவும் கோப்பையை வெல்வதற்கான தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளன. ஒருபுறம் பயிற்சிகள் தீவிரமாக இருந்தாலும், மறுபுறம் காயம் காரணமாக பிரபல வீரர்கள் பலரும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகி வருகின்றனர்.

சமீபத்தில் ராஜஸ்தான் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். இந்த நிலையில் பஞ்சாப் அணியின் ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் முழங்கை காயத்தால் ஐபிஎல்லின் ஆரம்ப போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
முழங்கை காயத்திற்கு ஆபரேஷன் செய்ய வேண்டிய சூழ்நிலையில் மேக்ஸ்வெல் இருக்கிறார். சுமார் 6-8 வாரங்கள் வரை அவர் ஓய்வெடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஆஸ்திரேலிய அணியில் இருந்தும் அவர் விலகியுள்ளார். மேலும் 8 வாரங்கள் வரை ஓய்வெடுக்க வேண்டியது இருப்பதால் பாதிக்கு மேற்பட்ட போட்டிகளில் ஐபிஎல் போட்டிகளில் அவரால் கலந்து கொள்ள முடியாது.
இது பஞ்சாப் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 10.5 கோடிகள் கொடுத்து பஞ்சாப் அணி மேக்ஸ்வெல்லை ஏலத்தில் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
