'ஓசி குடின்னு கிண்டல் பண்ணது கூட பரவால்ல, என்ன பாத்து..'.. 'பாட்டிலால் ஓங்கி அடித்து நண்பனைக் கொன்ற நபர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Dec 16, 2019 06:59 PM

அண்மையில் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி, தைலாவரம் டாஸ்மாக் கடையின் அருகே மர்மமான முறையில் பெயிண்டர் ஜெகன் என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

drunken friends killed their friend after he teased

இவ்வழக்கில் கோவளம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் முதலில் சரணடைய, அவர் அளித்த தகவலின் பேரில் கூடுவாஞ்சேரி ஜோசப் என்பவர் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் போலீஸாருக்கு வாக்குமூலம் அளித்த ஜோசப்,  ‘சரவணனும், இறந்த போன ஜெகனும் நெருங்கிய நண்பர்கள். கடந்த 11-ந்தேதி இரவு கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் 3 பேரும் நின்னு பேசிட்டு இருந்தப்போ, சரவணனும் ஜெகனும் பர்வதமலை கோயிலுக்கு போறதா சொன்னாங்க. அதுக்கு செல்போனை வைத்துக்கொண்டு 1500 ரூபாய் பணம் புரட்டி தர கேட்டாங்க. நானும் ஒரு ஆட்டோக்காரர் மூலம் ஏற்பாடு பண்ணி கொடுத்தேன்’ என்று கூறினார்.

மேலும் பேசியவர்,  ‘அதுக்கு அப்புறம் டாஸ்மாக் போகணும் 100 ரூபா தர முடியுமான்னு கேட்டேன். நாங்களும் வரோம்னு வந்தாங்க. 3 பேரும் மது பாட்டில்களை வாங்கிட்டு வந்து குடிக்க ஆரம்பிச்சோம். குடிச்சிட்டு நான் அடுத்த பாட்டிலை எடுத்தேன். அப்ப ஜெகன், `ஓசியில குடிக்க வந்தா ஒரு குவார்ட்டரோட நிறுத்திக்கணும்… நீ ரெண்டு குவாட்டர் குடிக்கற? என கேட்டதோடு மட்டுமல்லாமல், என்னைப் பார்த்து, கட்டையா இருந்துகிட்டு இது பண்ற வேலையைப் பாரு என சொல்லி என்னை கிண்டல் செய்தான்’ என்று கூறினார்.

ஜெகன் அவ்வாறு கேட்டதும் கோபம் தலைக்கேறிய ஜோசப், அங்கிருந்த பீர் பாட்டிலை எடுத்து ஜெகன் தலையில் அடிக்க, உதவி செய்ய வந்தவரை கிண்டல் பண்லமா? என்று கூறியபடி சரவணனும் தன் பங்குக்கு ஒரு பீர் பாட்டிலை எடுத்து ஜெகன் தலையில் ஓங்கி அடித்ததாகவும், இதனால் ஜெகன் இறந்துவிட்டதாகவும் இருவரும் ஒப்புக்கொண்டனர்.

Tags : #GUDUVANCHERY #FRIENDS #CHENGALPATTU