‘இன்று முதல் 5 நாட்களுக்கு’.. ‘சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம்’.. ‘விவரங்கள் உள்ளே’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 11, 2019 01:56 PM

கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் நடைபெறும் பொறியியல் பணி காரணமாக இன்று முதல் 5 நாட்களுக்கு மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Chennai Electric Train Cancelled Routes Timings Details Here

இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தாம்பரம் - செங்கல்பட்டு பிரிவில், கூடுவாஞ்சேரியில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால் நவம்பர் 11ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இரவு 8.01, 9.18 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்பட உள்ளன. இந்த ரயில்கள் கடற்கரை - தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே இரவு 10.15, 11.10 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் செங்கல்பட்டு - தாம்பரம் இடையேயான பகுதியில் ரத்து செய்யப்பட உள்ளன. இந்த ரயில்கள் தாம்பரம் - கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும்.

மேலும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே அதிகாலை 3.55, 4.35, 5.15, 5.50, காலை 6.05, 6.43, மாலை 5.18, இரவு 8.01, 9.18 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்பட உள்ளன. செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே அதிகாலை 3.55, 4.35, 4.50, காலை 6.40, 6.55, இரவு 7.25, 10.15, 11.10 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் செங்கல்பட்டு - தாம்பரம் இடையே ரத்து செய்யப்பட உள்ளன. அதேபோல, செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே காலை 8.40 மணிக்கு இயக்கப்படும் செமி பாஸ்ட் மின்சார ரயில் சேவையும் செங்கல்பட்டு - சென்னை கடற்கரை அருகே ரத்து செய்யப்பட உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #CHENNAI #ELECTRICTRAIN #LOCAL #TRAIN #CANCELLED #DATE #ROUTE #TIMING #DETAILS #CHENGALPATTU #TAMBARAM #BEACH