‘பைக் மீது மோதிய தண்ணீர் லாரி’.. சக்கரத்தில் சிக்கிய 1 வயது குழந்தை..! சென்னையில் நடந்த கோரவிபத்து..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Aug 02, 2019 02:28 PM

சென்னையில் தண்ணீர் லாரி மோதி 1 வயது குழந்தை பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Two wheeler accident near Pallavaram in Chennai

சென்னை பல்லாவரம் அருகே உள்ள குன்றத்தூரில் இருந்து தண்ணீர் லாரி ஒன்று பல்லாவரம் நோக்கி வந்துகொண்டிருந்துள்ளது. அப்போது அனகாபுரத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் தனது மனைவி சிந்து மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். லாரி மிகவும் நெரிசலான சாலையில் சென்றுகொண்டிந்தபோது, ராஜா லாரியை வலது புறமாக முந்த முயற்சித்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக லாரி வேகமாக வலது புறம் திரும்பியுள்ளது. இதனால் நிலைதடுமாறி இருசக்கரவானத்தில் இருந்த அனைவரும் கீழே விழுந்துள்ளனர். இதில் ராஜாவின் 1 வயது குழந்தை லாரியில் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மேலும் அவரின் மனைவி சிந்துவின் இடுப்பு பகுதியில் லாரியின் சக்கரம் ஏறியதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கபட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் தண்ணீர் லாரி ஓட்டுநரை கைது செய்துள்ளனர். இதில் லாரி ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

Tags : #CHENNAI #PALLAVARAM #ACCIDENT #LORRY #BABY