‘அதிவேகத்தில் வந்த கார்’... ‘அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்’... ‘தேசிய நெடுஞ்சாலையில் நடந்த பயங்கரம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Aug 12, 2019 11:58 AM

அதிவேகத்தில் வந்த கார், நிலை தடுமாறி கவிழ்ந்த விபத்தில், அடுத்தடுத்து வந்த 6 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்று மோதி விபத்திற்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

car accident in madurantakam 10 people injured

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே அச்சிறுப்பாக்கத்தில், இன்று அதிகாலை திண்டிவனத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதிவேகமாக வந்ததில் நிலைதடுமாறி அந்த கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதனால் அந்த காரை பின் தொடர்ந்து வந்த மூன்று கார்களும் மோதிக் கொண்டன. அதனை தொடர்ந்து வந்த, இரண்டு பேருந்துகள் மற்றும் ஒரு லாரியும் ஒன்றன் பின் ஒன்றாக மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் கார், லாரி மற்றும் பேருந்து ஆகியவற்றில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்தையடுத்து சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அச்சிறுப்பாக்கம் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போக்குவரத்தை சரி செய்து விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவுசெய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #ACCIDENT #MADURANTAGAM #CAR #BUS #LORRY