இன்றைய முக்கிய செய்திகள்..! ஒரு வரியில்... ஒரு நிமிட வாசிப்பில்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Sep 02, 2019 12:11 PM

இன்றைய முக்கிய செய்திகள் சுருக்கமாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. செய்திகள் பின்வருமாறு:-

Today headlines summarized read here more details

1. சென்னையில் அமமுக மாவட்ட செயலராக இருந்த பரணி கார்த்திகேயன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்

2. கலிபோர்னியாவில் சுற்றுலா படகு தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

3. அமெரிக்கா போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஏஹெச்-64 இ ரக 8 ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் இன்று இணைக்கப்பட்டது.

4. உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சி.வி சண்முகம் உறுதியளித்துள்ளார்.

5. வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

6. துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவன் தமிழகம் திரும்பினார்.

7. வெஸ்ட் இண்டீஸ் அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது.

8. ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை செப்டம்பர் 5 -ம் தேதி வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

9. பொருளாதார வீழ்ச்சியை நினைக்கும்போது பயமாகவும், பதட்டமாகவும் இருக்கிறது என சீமான் தெரிவித்துள்ளார்.

10. பிரதமர் மோடி டீ விற்ற இடம் சுற்றுலாத்தலமாக மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : #HEADLINES