'சிதறி கிடந்த ஆணுறை'... 'கழுத்தில் கொடூர வெட்டு'... 'என்ன தான் நடந்தது அவனுக்கு?'...உலுக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jul 31, 2019 12:41 PM

10 ஆம் வகுப்பு மாணவன் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

15 years old boy brutally murdered in Villupuram

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கேசவன். இவரது மகன் சிவக்குமார், எலவனாசூர்கோட்டை மேல்நிலை பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தான். கடந்த ஞாயிற்று கிழமை விடுமுறை தினம் என்பதால், விளையாடுவதற்காக வெளியே சென்ற சிவகுமார் மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர் அவனை பல இடங்களிலும் தேடி பார்த்தார்கள். ஆனால் சிவகுமார் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நள்ளிரவில் காட்டு பகுதி வழியாக சென்றவர்கள், சிறுவன் ஒருவன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்கள். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டர்கள். அப்போது அந்த சிறுவன் காணாமல் போன சிவகுமார் என்பது தெரியவந்தது. இதனிடையே சிறுவனின் சடலத்திற்கு அருகே ஆணுறைகள் சிதறி கிடந்துள்ளன. இதையடுத்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறர்கள்.

இதனிடையே அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த 4 பேரை பிடித்த காவல்துறையினர், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பள்ளி மாணவன் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அந்த பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MURDER #SCHOOLSTUDENT #VILLUPURAM #SCHOOL BOY