கல்யாணமான 14 நாளில் மணமகன் தீ வைத்து கொலை..! பரபரப்பு சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Aug 02, 2019 12:09 PM

திருமணமான 2 வாரத்தில் மணமகன் தீ வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

New groom murdered in Villupuram

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் டி.வி நகரைச் சேர்ந்தவர் சேதுபதி. இவர் அப்பகுதியை சேர்ந்த முருகவேணி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் 14 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சேதுபதி நேற்று வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வரும்போது மதுபோதையில் வந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து சேதுபதி வீட்டில் தூங்கிய சமயம் முருகவேணி அவரை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு மண்ணெண்ணையை ஊற்றி வீட்டிற்கு தீ வைத்தாக கூறப்படுகிறது. இதில் சேதுபதி தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலிஸார் சேதுபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இதனை அடுத்து சேதுபதியின் மனைவி முருகவேணி மற்றும் அவரது மாமியார் குமுதாவிடம் போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2 வாரத்தில் மணமகன் தீ வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #VILLUPURAM #DEATH #BURN #MARRIAGE #GROOM #BRIDE