‘அப்பா கூட்டிட்டு வரச் சொன்னாங்க’... 'நம்பிஅனுப்பிய மாணவியிடம்'... 'உறவினர் செய்த பகீர் காரியம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Aug 20, 2019 12:31 PM

உறவினர் என்ற பெயரில், 9-ம் வகுப்பு மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

sexual harassment for 9th standard student in villupuram

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே, கொம்பசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி. இவர் அருகில் உள்ள பள்ளிக்கு சென்று அங்கு, படித்து வரும் உறவினர் மகளான 9-ம் வகுப்பு மாணவியை, தந்தை அழைத்து வர சொன்னதாக கூறியுள்ளார். வந்தவர் உறவினர் என்பதால் வகுப்பு ஆசிரியரும் அவரை நம்பி அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் தன்னுடன் வந்த அந்த மாணவியை, அருகில் உள்ள தைலத்தோப்பிற்கு அழைத்துச் சென்ற ராஜீவ் காந்தி, அங்கு தவறாக நடக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி சத்தம் போட்டதால், அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து மீட்டனர். இதையடுத்து உடனே ராஜீவ் காந்தி அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் மாணவி கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணிவியின் பெற்றோர், திருக்கோவிலூர் மகளிர் காவல் நிலையத்தில், புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், ராஜீவ் காந்தியை சிறார் வன்கொடுமை தடுப்பு சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.

Tags : #SEXUALABUSE #VILLUPURAM