டேய் நாங்க 'ஜாயின்ட்' அடிக்க போறோம், நீயும் வாடா...! 'கஞ்சா புகைத்து விட்டு தாயிடம்...' தாய் போட்ட அதிரடி ஸ்கெட்ச்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மகன் தனக்கு பாலியல் தொந்தரவு செய்ததற்கு ஆள் வைத்து கொலை செய்த வளர்ப்பு தாய், கூலி படைகளுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆவடி மக்களிடையே கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
ஆவடி அருகே உள்ள கன்னிகாபுரம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் அஞ்சலி(47). பெற்றோரை இழந்த சதீஷை சிறு வயது முதல் எடுத்து வளர்த்து வந்துள்ளார் அஞ்சலி. சதிஷ், ஆவடி அடுத்த திருநின்றவூர், வத்சலாபுரம், 3-வது தெருவில் உள்ள பாழடைந்த வீட்டில் கடந்த 2ம் தேதி காலை கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். விசாரணையை தொடங்கிய திருநின்றவூர் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, 3 மர்ம நபர்கள் ஓட்டிச் சென்ற 'ஹோண்டா டியோ' இருசக்கர வாகனத்தின் கடைசி இரண்டு இலக்கங்கள் மட்டும் தெரிந்தன.
அந்த எண்ணை வைத்துக் கொண்டு போலீசார் விசாரித்தபோது அது சதீஷின் வளர்ப்பு தாயான அஞ்சலியின் முகவரி என தெரிய வரவே, வழக்கில் ஒரு திருப்பம் ஏற்பட்டு அஞ்சலியிடம் விசாரணையை தொடங்கினர் போலீசார். ஆனால் அஞ்சலி தன்னுடைய வண்டி காணவில்லை என கூறியுள்ளார். அதை அடுத்து அஞ்சலியின் ஹோண்டா டியோ இருசக்கர வாகனம், ஆவடியில் உள்ள இரும்பு கடையில் இருந்து மீட்கப்பட்டது. இருசக்கர வாகனத்தை இரும்புக் கடையில் விட்ட, குமார் என்பவர் தலைமறைவானது போலீசாரை மேலும் சந்தேகத்தில் ஆழ்த்தியுள்ளது.சதிஷுக்கு கஞ்சா பழக்கம் இருந்ததால் அவரது நண்பர்களையும் பிடித்து விசாரித்தனர்.
தலைமறைவான குமாரின் செல்போன் அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்தபோது அந்த எண்ணில் இருந்து அதே பகுதியைச் சேர்ந்த கட்டட மேஸ்திரியான 52 வயது காமராஜ் என்பவருக்கு அடிக்கடி அழைப்பு சென்றது தெரியவந்தது. காமராஜை பிடித்து விசாரித்த போது அவருக்கும், கொலையான சதீஷின் வளர்ப்புத் தாயான அஞ்சலிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது அம்பலமானது.
போலீசார் அஞ்சலி, காமராஜ் இருவரிடமும் விசாரணை செய்த போது அவர்களுக்கு இடையே கள்ள தொடர்பு இருந்தது தெரியவந்தது. இளைஞனாக வளர்ந்த பின் சதீஷுக்கு கஞ்சா புகைக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதோடு, கஞ்சா புகைத்து விட்டு தாயிடம் தவறாக நடக்கவும் முயன்றுள்ளார். இதனால் மனம் வெறுத்த அஞ்சலி தனது கள்ளக்காதலன் காமராஜிடம் சொல்லி அழுத்துள்ளதால் கோபமடைந்த காமராஜ் சதீஷை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
காமராஜ் தனது நண்பரான சுரேஷிடமும், விக்னேஷிடமும் நடந்த சம்பவங்களை கூறி சதீஷைக் கொலை செய்ய காமராஜும் அஞ்சலியும் முடிவு செய்தனர். கூலிப்படைக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் பேரம் பேசி, 25 ஆயிரம் ரூபாய் முன்பணமும் கொடுத்துள்ளனர்.
சுரேஷும், விக்னேஷும் சதீஷிடம் கஞ்சா புகைக்கலாம் என கூறி சதீஷை திருநின்றவூர் பாழடைந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று பட்டாக் கத்திகளால் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர் விசாரணையில்தெரியவந்துள்ளது.
அதனடிப்படையில் சதீஷை வளர்த்து வந்த அஞ்சலி, அவரது கள்ளக்காதலன் காமராஜ், கூலிப்படையைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் விக்னேஷ் ஆகிய 4 பேரையும் நேற்று கைது செய்த திருநின்றவூர் காவல்துறையினர், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை புழல் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள குமார் என்பவரை தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.