'டி-20' போட்டியில் 3 வீரர்களால் '200 ரன்கள்' அடிக்க முடியும் ... முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் 'யுவராஜ்சிங்' கணிப்பு...
முகப்பு > செய்திகள் > விளையாட்டு20 ஓவர் போட்டியில் 3 வீரர்களால் இரட்டை சதம் அடிக்க முடியும் என்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், 20 ஓவர் போட்டியில் இரட்டை சதம் அடிப்பது மிகவும் கடினமானது என்பதை என்னால் உணர முடிகிறது. ஆனால் அது முடியாதது அல்ல என்று தன்னால் சொல்ல முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் போட்டிகளில் அதிரடியான ஆட்டத்தை பார்க்கும் போது முடியாதது எதுவுமில்லை எனக் குறிப்பிட்ட அவர், கிறிஸ்கெய்ல், டிவில்லியர்ஸ் மற்றும் ரோகித் சர்மா ஆகிய மூவரும் 20 ஓவர் போட்டியில் 200 ரன்கள் என்ற இலக்கை எட்டிப்பிடிக்கக் கூடிய தகுதி படைத்தவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். இதில் கிறிஸ்கெய்ல் மற்றும் டிவில்லியர் ஆகிய இருவரும் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர்.
20 ஓவர் சர்வதேச போட்டிகளில் ரோகித் சர்மா 4 சதம் அடித்து முதல் இடத்தில் உள்ளார். 20 ஓவர் சர்வதேச போட்டிகளில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்தவர் ஆரோன்பிஞ்ச். அவர் 172 ரன்கள் குவித்துள்ளார். கிறிஸ்கெய்ல் ஐ.பி.எல். போட்டியில் அதிக பட்சமாக 179 ரன்கள் எடுத்துள்ளார்.
