'இப்படி 'ப்ரபோஸ்' பண்ணுனா யாருக்கு தான் லவ் வராது'... 'நீ கலக்கு தலைவா'... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Feb 16, 2020 12:34 PM

உலகம் முழுவதும் காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், ராணுவ வீரர் ஒருவர் தனது காதலை வெளிப்படுத்திய விதம் இணையத்தை கலக்கி வருகிறது.

Russian officer propose to his girlfriend using 16 military tanks

ரஷியாவின் அலபினோ பகுதியில் உள்ள ராணுவ படைப்பிரிவில் வீரராக பணி புரிபவர் டெனிஸ் கென்ஸ்செவ். இவர் அலெஸ்சாண்டிரியா என்ற பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார். ஆனால் தனது காதலை வெளிப்படுத்த தக்க தருணத்தை எதிர்பார்த்து கொண்டிருந்த அவருக்கு காதலர் தினமும் வந்தது. இதையடுத்து தனது காதலியிடம் தனது காதலை கூற முடிவு செய்த டெனிஸ், அலெஸ்சாண்டிரியாவை தான் பணிபுரியும் ராணுவ தளத்திற்கு அழைத்துள்ளார்.

ராணுவ தளத்திற்கு வந்த தனது காதலியின் கண்களை மூடிய காதலன் ராணுவ தளத்தின் மையப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே தயாராக இருந்த டெனிஸின் சக வீரர்கள், 16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி வைத்திருந்தார்கள். அப்போது காதலியின் கண்ணை திறந்த டெனிஸ், கையில் பூங்கொத்துடன், தனது காதலை வெளிப்படுத்தினார். அப்போது காதலி அலெஸ்சாண்டிரியா ராணுவ டேங்கர்கள் இதய வடிவில் சுற்றி நிற்பதையும், காதலன் டெனிஸ் கையில் பூங்கொத்துடன் தன்னை லவ் ப்ரபோஸ் செய்ததையும் கண்டு வாயடைத்து போனார்.

இதையடுத்து என்னை காதலிக்கிறாயா? என கேட்ட டெனிசின் கேள்விக்கு இன்ப அதிர்ச்சியில் இருந்த அலெஸ்சாண்டிரியா, உடனடியாக ஆம் என கூறி காதலுக்கு சம்பதம் தெரிவித்தார். இதனால் காதலர்கள்  இருவரும் கட்டியணைத்து அன்பை பரிமாறி கொண்டார்கள். 16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி ராணுவ வீரர் தனது காதலியிடம் காதலை வெளிப்படுத்திய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பலரையும் கவர்ந்துள்ளது.

Tags : #RUSSIAN OFFICER #PROPOSE #GIRLFRIEND #MILITARY TANKS #HEART SHAPED