‘பெங்களூரில் காணாமல் போய்’.. ‘கோவாவில் கிடைத்த மகள்..’ வீட்டிற்கு வந்த பின்.. ‘பெற்றோர் செய்த அதிரவைக்கும் காரியம்..’

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Aug 21, 2019 12:55 PM

எர்ணாகுளத்தில் மகளைக் கொலை செய்துவிட்டு பெற்றோரும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Parents murdered daughter committed suicide in Trivandrum

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே  உள்ள புதுவை பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் (54). இவருடைய மனைவி கீதா (53), மகள் நயனா (24). பெங்களூர் விமான நிலையத்தில் பணிபுரிந்து வந்த நயனா அங்குள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் திடீரென நயனா காணாமல் போயுள்ளார். இதைத்தொடர்ந்து அவருடைய பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் நயனா கோவாவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் இளைஞர் ஒருவருடன் இருப்பது தெரியவந்துள்ளது.

பின்னர் விசாரணைக்காக அழைக்கும்போது காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டுமென போலீஸார் நயனாவிடம் அறிவுறுத்திவிட்டு வந்துள்ளனர். நேற்று முன்தினம் இதற்காக அவர் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் வழக்கம்போல அனைவரும் தூங்கச் சென்றபின் சுபாஷின் தம்பி சுரேஷ் அவருக்கு ஃபோன் செய்துள்ளார். நீண்ட நேரமாக யாரும் ஃபோனை எடுக்காததால் சந்தேகமடைந்த அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது சுபாஷ், கீதா, நயனா ஆகிய 3 பேரும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளனர்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மகள் காதலனுடன் சென்றதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்துவிட்டு பெற்றோரும் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #TRIVANDRUM #ERNAKULAM #BANGALORE #GOA #FATHER #MOTHER #DAUGHTER #MURDER #SUICIDE #SHOCKING