'உருவம்.. வயசு.. நடத்தை'.. '3க்கும் சம்மந்தமே இல்ல.. அதவெச்சு பிடிச்சோம்'.. பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Sep 10, 2019 03:44 PM

டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில், 81 வயது முதியவர் போல வேடமணிந்து வந்து பாதுகாப்பு சோதனையில் சிக்கிய சம்பவம் பரபரப்பை கிளப்பியது.

man impersonates 82 yr old to cheat in security checking

டெல்லி போன்றதொரு சர்வதேச விமான நிலையங்களில்,  பாதுகாப்பு சோதனைகளையும் மீறி பல விதமான மோசடிகள் நடக்கும். இதன் காரணமாகவே அதுபோன்ற இடங்களில் வழக்கத்தை விடவும் அதிகமான பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருக்கும்.

ஆனாலும் பலர் வெவ்வேறு வகையிலான காரணங்களுக்காக, தங்கள் சொந்த அடையாளங்களை மறைத்துக்கொண்டு வருவர். அவர்களை கண்காணிக்கவே, மத்திய தொழில் பாதுகாப்புப் படை பிரிவினர் அங்கு சோதனையில் ஈடுபட்டிருப்பார்கள். அவர்களுக்கு சந்தேகம் வரும் வகையில் தென்படும் நபர்கள் ஒரு சில கட்ட சோதனைகளிலேயே பிடிபட்டு விடுவார்கள்.

அந்த வரிசையில், 81 வயது முதியவரான அம்ரிக் சிங் என்பவரின் பெயரில் போலி பாஸ்போர்ட் தயார் செய்து, அதன் பேரில் டெல்லி விமான நிலையத்துக்கு வந்த ஜெயேஷ் படேல் என்கிற அகமதாபாத்தைச் சேர்ந்த 32 வயது இளைஞர், பாதுகாப்பு சோதனையில் சிக்கினார்.

அவரை விசாரித்த பாதுகாப்பு படை பிரிவினர் அவரின் வயதுக்கும் உருவத்துக்கும் நடத்தைக்கும் தொடர்பில்லாததுபோல் சந்தேகம் எழுந்ததாகக் கூறியுள்ளனர்.

Tags : #AIRPORT #SECURITY #PASSPORT #CHEAT #DELHI