‘கோயிலுக்கு செல்லும் வழியில்’.. ‘தந்தை கண்முன்னே’.. ‘4 வயது சிறுமிக்கு’ நடந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம்..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Aug 26, 2019 06:53 PM
டெல்லியில் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த சிறுமி மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

டெல்லியில் கடந்த சனிக்கிழமை 4 வயது சிறுமி ஒருவர் தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் கோயிலுக்கு சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது எங்கிருந்தோ இருந்து வந்த பட்டத்தின் மாஞ்சா நூல் ஒன்று சிறுமியின் கழுத்தில் சிக்கியுள்ளது. இதில் கழுத்து அறுபட்டு அந்த சிறுமி தந்தை கண்முன்னாலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதேபோல கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி பொறியாளர் ஒருவரும் பட்டத்தின் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் டெல்லியில் இதுபோன்ற உயிரிழப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாஞ்சா நூல்களை தயாரிப்பதும், விற்பதும், சேமித்து வைப்பதும் குற்றம் என அறிவிக்கப்பட்டு, 3 ஆண்டுகளுக்கு முன்னரே தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் மாஞ்சா நூல் விற்பனை செய்பவர்களுக்கு 5 வருடம் சிறை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடைக்குப் பிறகும் மாஞ்சா நூலால் தொடர்ந்து ஏற்பட்டு வரும் உயிரிழப்புகளைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
