'இதனாலதான் அப்பா பிரிஞ்சு போனார்'.. '17 வயது மகளுக்கு.. 'தாய் இழைத்த கொடூரம்'.. சிக்கவைத்த மகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Aug 23, 2019 11:40 AM

பெண்களுக்கு நிகழும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக இந்தியாவில் பல்வேறு சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

Mother forces daughter into illicit physical assault

குழந்தைகள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுதல் மற்றும் வயதுவராத பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிரான சட்டத்திருத்தங்கள் என போக்ஸோ சட்டம் பல விதமான பாலியல் கொடுமைகளுக்கு எதிரான சட்ட வரைவுகளை முன்வைக்கிறது. இந்த நிலையில், பெற்ற தாயே தன்17 வயது மகளை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த ஆஷா ராணி என்பவரின் மகள், தனது தாயின் தவறான நடத்தை காரணமாக தன், தந்தை தனது தாயை விட்டுப் பிரிந்து சென்றதாகவும், ஆனால் அதன் பின்னும் தனது தாய் திருந்தாமல், அவ்வாறே இருந்து வந்ததாகவும், 17 வயதான தன்னை, தனது நண்பரான ராம் லூபையாவை தனக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், தன்னை திருமணம் செய்த ராம் லூபையா என்பவர், தன்னை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்ததாகவும், அங்கிருந்து தப்பி, தனது தாய் வீட்டுக்கு ஓடிவந்தபோது, தனது தாய் தன்னை அடித்து துன்புறுத்தி, மீண்டும் கணவரிடம் சென்று ஒப்படைத்ததாகவும் கூறியுள்ளார்.

ஒரு சூழலில், மீண்டும் தப்பித்து வந்த அந்த பெண், தனது தந்தையின் நண்பர் ஒருவரைச் சந்தித்து,  இந்த விஷயத்தை அந்த பெண் கூறியுள்ளார். அதன் பின், அந்த மனிதர்தான், இந்த பெண்ணை அழைத்துக்கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீஸார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #SEXUALABUSE #MOTHER #DAUGHTER