‘சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த மகள்’... ‘பதற்றத்தில் தாய் செய்த காரியம்’... 'வினையாகிப்போன விபரீதம்'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Sep 05, 2019 06:28 PM

கல்லூரியிலிருந்து தனது ஆண் நண்பருடன் வீட்டுக்கு சொல்லாமல், இன்ப அதிர்ச்சி தரவந்த மகளை, எதிர்பாராதவிதமாக தாய் செய்த காரியம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Teen Daughter Surprises Mom With Unannounced Visit

அமெரிக்காவின் ஓஹியோவில் கல்லூரியில் தங்கி படித்து வரும், 18 வயது மாணவி ஒருவர், தனது ஆண் நண்பருடன் வீட்டுக்கு சென்று, தாயாருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க முடிவு செய்துள்ளார். இதனால் அவர், கல்லூரியிலிருந்து வீட்டுக்கு வருவதை முன்கூட்டியே தெரிவிக்காமல் சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் யாருமின்றி தனியாக வசித்து வரும் அவரது தாயார், படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.

மகள் வருவதை அறியாத அவர், வீட்டின் முன் அறையில் சத்தம் கேட்டதை அடுத்து, மர்மநபர்கள் யாரோ புகுந்துவிட்டதாக என எண்ணி, பாய்ன்ட் 38 ஸ்பெஷல் ரிவால்வரை கையில் எடுத்துக்கொண்டு தயார்நிலையில் இருந்தார். அப்போது மகள் இன்ப அதிர்ச்சி கொடுக்க படுக்கை அறையின் கதவை திறந்து உள்ளார். இதனை அறியாத அவரது தாயார், துப்பாக்கியில் சுட்டுள்ளார்.  அப்போது மகள் அலறியப்பின்னர்தான், தான் துப்பாக்கியால் சுட்டது தான் பெற்ற மகள் என அவருக்கு தெரியவந்தது. இதனை உண்ர்ந்த அவர் பதறித்துடித்தார்.

மகளின் அருகில் இருந்த அவரது ஆண் நண்பர், உடனடியாக 911 எமர்ஜென்சிக்கு போன் செய்தார். அதன்பிறகு அங்கு வந்த போலீசார் மகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். கையில் காயம்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்காவில் கடந்த 2017-ம் ஆண்டு மட்டும், துப்பாக்கிச் சூட்டில் 40 ஆயிரம் பேர் பலியாகினர். அவற்றில் ஆயிரத்து 1,112 பேர் தவறுதலாக சுடப்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #AMERICA #GUN #SHOOT #MOTHER #DAUGHTER