‘புது ஜெர்சியோட இதுதான் முதல் மேட்ச்’.. ஆனா டாஸ் போடறதுக்குள்ள இப்டி ஆகிடுச்சே..! சோகத்தில் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Sep 15, 2019 08:52 PM

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி மழையால் தடைபட்டது.

IND vs SA 1st T20I: Match called off due to rain

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று (15.09.2019) தர்மசாலா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி வீரர்கள் புதிய ஜெர்சியுடன் விளையாட இருந்தனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பே மழை பெய்ய தொடங்கியது. இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால் மழை தொடர்ந்து பெய்ததால் மைதானத்தில் பந்து வீசுவதற்கான சாதகம் இல்லாமல் போனது. இதனை அடுத்து மழையால் போட்டி ரத்து என அறிவிக்கப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2 -வது டி20 போட்டி வரும் 18 -ம் தேதி மொகாலியில் நடைபெற உள்ளது.

Tags : #ICC #BCCI #VIRATKOHLI #INDVSA #T20I #CRICKET #CALLEDOFF