‘என் 12 வயசுலயே அப்பா இறந்துட்டாரு’.. ‘அப்போ நான் ஒரு முடிவெடுத்தேன்’.. உருக்கமாக பேசிய இந்திய வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Sep 02, 2019 10:42 AM

இந்திய கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி தன்னுடைய முதல் சதத்தை தனது தந்தைக்கு சமர்பிப்பதாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Hanuma Vihari dedicates maiden Test century to late Father

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிங்ஸ்டன் சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 264 ரன்களை எடுத்தது. இதில் கே.எல்.ராகுல் (13), புஜாரா (6) சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலி (76) மற்றும் மயனங் அகர்வால் (55) கூட்டணி நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தியது.

இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில், ஹனுமா விஹாரி மற்றும் ரிஷப் பந்த் கூட்டணி ஸ்கோரை உயர்த்தும் பொறுப்பை கையில் எடுத்தது. இதில் ரிஷப் பந்த் 27 ரன்னில் அவுட்டாகினார். இதனை அடுத்து களமிறங்கிய ஜடேஜாவும் 16 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த இஷாந்த் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்த ஹனுமா விஹாரி 225 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அதேபோல் இஷாந்த் ஷர்மா 80 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். இதனை அடுத்து 416 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

சதமடித்தது குறித்து தெரிவித்த ஹனுமா விஹாரி, ‘என்னுடைய அப்பா நான் 12 வயதாக இருக்கும்போதே இறந்துவிட்டார். அப்போது நான் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என முடிவெடுத்தேன். என்னுடைய முதல் சதத்தை அவருக்கு சமர்பிக்கிறேன். இந்த நாள் எனக்கு உணர்ச்சிகரமான நாள். இதைப் பார்த்து அவர் பெருமைப்படுவார் என நம்புகிறேன். சதமடித்தது சந்தோஷமாக உள்ளது. இந்த சந்தோஷம் இஷாந்த் ஷர்மாவைத்தான் சேர வேண்டும். அவருடைய பௌலிங் அனுபவம் எனக்கு உதவியாக இருந்தது’ என தெரிவித்துள்ளார்.

Tags : #BCCI #HANUMAVIHARI #CENTURY #TEST #FATHER #TEAMINDIA #INDVWI #ISHANTSHARMA