மறுபடியும் 'ஆரம்பிங்க' இல்லனா... குடும்பத்தோடு 'தற்கொலை' முயற்சி... மிரளவைத்த வேட்பாளர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Jan 03, 2020 02:56 PM

அரியலூர் அருகேயுள்ள அல்லிநகரம் ஊராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்றத் தலைவராக மருதமுத்து என்பவர் 130 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

Local Body Election Result: candidate wants re-counting

இதையடுத்து அவரை எதிர்த்து போட்டியிட்ட பழனிவேல் என்பவர் வாக்கு எண்ணிக்கையின் போது தான் முன்னிலை வகித்ததாகவும், ஆனால் எதிர்த்து நின்றவர் குளறுபடி காரணமாக ஜெயித்து விட்டதாகவும் கூறி அரியலூர்-பெரம்பலூர் நெடுஞ்சாலையில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தினார்.

மேலும் குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கும் அவர் முயற்சி செய்தார். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அவர் தற்கொலை செய்து கொள்ளாமல் தடுத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.