'போதையில்' வழிமறித்து.. 'பெண்ணை வன்புணர்வு' செய்துவிட்டு.. பஸ் ஏற்றிவிட சென்றபோது நடந்த 'பயங்கர' சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 29, 2019 05:45 PM

கடலூர் மாவட்டம், நெய்வேலியை அடுத்த கொல்லிருப்புக் காலனிப் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ், ராஜதுரை, சதீஷ்குமார், சிவபாலன், கார்த்திக் ஆகிய 5 இளைஞர்களும் 22 -25 வயதுக்குட்பட்டவர்கள்.

cuddalore men killed their friend after abusing a woman

இந்த இணைபிரியாத நண்பர்கள்தான், தலையில் அடிபட்டிருந்த தங்கள் நண்பன் பிரகாஷை மந்தாரக்குப்பம்  தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் பிரகாஷ் இறந்துவிட்டதாக, அவரை பரிசோதித்த மருத்துவர் கூற, அங்கேயே அழுது புரண்டுள்ளனர். அப்போது மருத்துவமனை அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீஸாரிடம் பிரேதம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து இளைஞர்களை விசாரித்த போலீஸாரிடம் அவர்கள்,  உண்மையைச் சொல்லிவிடுவதாகக் கூறி,‘நாங்க எல்லாரும் குடிச்சிட்டு இருந்தோம். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் எங்கள் நண்பன் பிரகாஷை அடிச்சு போட்டுட்டு போயிட்டாங்க, அதனால்தான் மருத்துவமனைக்கு வந்தோம்’ என்று கூறி அதிர வைத்தனர்.

எனினும் 4 பேரும் போதையில் இருந்ததால் அவர்களை பிறகு விசாரிக்க போலீஸார் திட்டமிட்டிருந்தனர். இதனிடையே சில வருடங்களுக்கு முன்பு கணவரை இழந்த, 3 வயது குழந்தைகளுக்கு தாயான 31 வயது பெண் ஒருவர் போலீஸாரை அணுகியுள்ளார். அப்போது அண்மையில் வடலூர் சந்தைக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் தனது உறவினருடன் தைலமரக்காட்டு வழிப்பாதையில் வந்துகொண்டிருந்தபோது, தண்ணி அடித்துக்கொண்டிருந்த கும்பல் ஒன்று வழிமறித்து தன் உறவினரை அடித்து விரட்டிவிட்டு, தன்னை இழுத்துக்கொண்டு சென்று வன்புணர்வு செய்ததாகவும் கூறியுள்ளார். 

அதன் பின் அவர்களில் 2 பேர் மட்டும் தன்னை பஸ் ஏற்றிவிட வந்ததாகவும், ஆனால் அவர்களுக்கும் தன்னை அடைய ஆசை வந்ததாகவும், அந்த சமயம் அவர்களின் பின்னாலேயே வந்த அவர்களின் நண்பர்கள் அவர்களுடன் வாக்குவாதம் செய்ய தொடங்கியதாகவும், அந்த நேரத்தில் தப்பி வந்துவிட்டதாகவும் அப்பெண் கூறியுள்ளார். இப்போதுதான் போலீஸாருக்கு, ஏற்கனவே பிடிபட்ட இந்த இளைஞர்கள் மீது சந்தேகம் வந்து விசாரித்தனர். அப்போது, அப்பெண்ணை வன்புணர்வு செய்த கும்பல் இவர்கள்தான் என அப்பெண் அடையாளம் காட்டியுள்ளார். இது தொடர்பான தகராறிலேயே அந்த இளைஞர்கள் தங்கள் நண்பன் பிரகாஷின் மண்டையை உடைத்ததாகவும் அவர்களே ஒப்புக்கொண்டதை அடுத்து போலீஸார் அந்த இளைஞர்கள் மீது வன்புணர்வு மற்றும் கொலைவழக்குகளை பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : #CUDDALORE #NEYVELI