‘கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டா வர்ற??’... ‘இளைஞருக்கு நேர்ந்த பயங்கரம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Aug 06, 2019 03:32 PM

கடலூர் அருகே கூலிங்கிளாஸ் அணிந்து சென்றதற்காக  இளைஞர் ஒருவரையும், அவரது தாயையும் தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

clash between two groups youth attacked by 4 people

மு.பட்டிக்குடிகாடு கிராமத்தில்  சேர்ந்தவர் 20 வயதான அழகேசன். இவர் கடந்த சனிக்கிழமை அன்று  கூலிங் கிளாஸ்  அணிந்தவாறு இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். அப்போது அவரை மற்றொரு சமூகத்தை சேர்ந்த 4 பேர் வழி மறித்து, 'எங்கள் பகுதிக்குள்  கண்ணாடி அணிந்து செல்லக்கூடாது' எனக் கூறியதோடு, இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கி தள்ளிச்செல்லுமாறும் கூறி தாக்கியதாகத் தெரிகிறது.

இதனை தட்டிக்கேட்ட அழகேசனின் தாய் அன்னக்கிளியையும், அந்த  நான்கு பேர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அழகேசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து தாக்குதல் நடத்திய மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள கோபி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : #ATTACKED #CUDDALORE #CLASH