‘அரிசி வாங்க ரூ.200 கொடுத்தேன்’ ‘ஆனா அவரு அரிசி வாங்கல’ ‘அதனாலதான்...’ மனைவி அளித்த பரபரப்பு வாக்குமூலம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Aug 08, 2019 07:22 PM

அரிசி வாங்க கொடுத்த பணத்தில் மது குடித்துவிட்டு வந்த கணவரை கொலை செய்த மனைவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Wife arrested for killed her husband in Cuddalore

கடலூர் மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள ஆதிவாசி காலணியில் மணி-வள்ளி என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு மணி மது போதையில் கீழே விழுந்து காயமடைந்ததாக கூறி வள்ளி மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

மேலும் மணியின் உடலில் காயங்கள் இருந்ததால் இது போலிஸாருக்கு மருத்துவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து மருத்துவமனைக்கு சென்ற போலிஸார் மணியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இதனை அடுத்து மணியின் மனைவி வள்ளி மற்றும் அவரது உறவினர்களிடம் போலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது வள்ளி முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளார். இதனை அடுத்து அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் மணியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து போலிஸாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘எனது கணவரிடம் சம்பவத்தன்று அரிசி வாங்குவதற்காக ரூ.200 கொடுத்தேன். ஆனால் அவர் அரிசி வாங்காமல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அருகில் இருந்த கட்டையால் அவரை தாக்கினேன். இதில் காயமடைந்து அவர் உயிரிழந்துவிட்டார்’ என தெரிவித்துள்ளார்.

Tags : #HUSBAND #WIFE #KILLED #CUDDALORE