‘ரஜினி, கமல் அரசியல் பிரவேசம்’... ‘மக்களுக்கு தெரியும்’... ‘எம்எல்ஏ ரோஜா அதிரடி பதில்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 29, 2019 05:34 PM

நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரின், அரசியல் பிரவேசம் குறித்து நடிகையும், எம்.எல்.ஏ.வுமான ரோஜா செல்வமணி கருத்து தெரிவித்துள்ளார்.

roja speaks about rajinikanth and kamal hassan politics

ஆந்திரா மாநிலம் நகரி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர், நடிகை ரோஜா செல்வமணி. இவர், அந்த  தொகுதிக்கு உட்பட்ட ரயில் நிலைய மேம்பாட்டு பணியினை மேற்கொள்வதற்காக, சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே பொது மேலாளரை சந்தித்து மனு கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘தமிழகத்தில் ஆளுமை மிக்கத் தலைவராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாறியிருக்கிறார்.

அ.தி.மு.க.வை கட்டுக்கோப்பாக வழிநடத்தி, தனித்தன்மையோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகவும்’ பாராட்டு தெரிவித்தார். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு, ‘யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்கள் யாருக்கு வாக்கு அளிக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். மேலும், மக்களை நேரடியாக சந்திக்காமல், யாராலும் அரசியலில் வெற்றி பெறமுடியாது.

மக்கள் எளிதில் தனக்கு வாக்கு அளித்துவிடுவார்கள் என ஒரு நடிகன் நினைத்தால், அது நடக்காது’ என அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாக நடிகர் ரஜினி பேசியது குறித்த கேள்விக்கு, ‘ரஜினி ஏன் அப்படி கூறினார் என்று எனக்கு தெரியவில்லை. யாரை எங்கே வைக்க வேண்டும் என்பது மக்களுக்கு தெரியும்’ என்று ரோஜா கூறினார்.