'ஐபிஎல் போட்டியில் விளையாட வைச்சிருந்த’... ‘என்னோட கிரிக்கெட் பேட்டை காணல’... 'சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் வேதனை’

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Mar 09, 2020 12:06 AM

மும்பையில் இருந்து கோவைக்கு விமான பயணம் மேற்கொண்டபோது தமது கிரிக்கெட் பேட் காணாமல் போய் விட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

CSK Harbhajan Singh\'s bat Missing or Stolen from flight?

ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் 10 நாட்களே உள்ளன. இந்நிலையில், ஐபிஎல் போட்டியில் விளையாட வைத்திருந்த தனது பேட் காணாமல் போய்விட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரும், இந்திய அணி வீரருமான ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் புகார் தெரிவித்துள்ளார். மும்பையில் இருந்து கோவைக்கு நேற்று விமானத்தில் பயணம் மேற்கொண்டதாகவும், கோவையில் வந்திறங்கியதும் தமது உடைமைகளை பரிசோதித்ததில் பேட் ஒன்று காணாமல் போய் விட்டது தெரிய வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பேட் என்ன ஆனது என்பது தெரியவில்லை என்றும், அதேநேரத்தில் பேட் திருடப்பட்டு இருக்கலாம் என தாம் கருதவில்லை என்றும் ஹர்பஜன் சிங் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள விமான நிறுவனம், ஹர்பஜன் சிங்கின் சிரமத்திற்கு ஆளானதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். உடனடியாக இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.

Tags : #CSK #IPL #MUMBAI #CRICKET #TWITTER #COIMBATORE #HARBHAJAN SINGH