‘யாரும் சாமி சிலைய தொடாதீங்க....’ ‘கடவுளுக்கு மாஸ்க் அணிவித்த அர்ச்சகர்...’ கோயில் நிர்வாகம் எடுத்த எச்சரிக்கை முடிவு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Mar 11, 2020 12:16 AM

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் பீதியால் வாரணாசியில் கடவுள் சிலைக்கு முக கவசம் போட்டு யாரும் தொடவேண்டாம் என்று எழுதி இருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

man put face mask to God in Varanasi after coronavirus spread

கோவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவி சுமார் 4091க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர் மேலும் 116657 மக்கள் இவ்வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். சீனாவின் உஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் மெதுவாக பரவி வருகிறது.

இந்தியாவில் சுமார் 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனோ இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வாரணாசி பிரகலதேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் ஒருவர் சாமி சிலைகளுக்கு முகக்கவசம் அணிவித்துள்ளார். மேலும் பக்தர்கள் யாரும் சாமி சிலையை தொடவேண்டாம் எனவும் கடவுள் சிலை அருகில் பலகையில் எழுதி வைத்துள்ளார்.

மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த விஸ்வநாதர் சிலைக்கு முகக்கவசம் அணிவித்து உள்ளோம் எனவும், ஏற்கனவே வைரஸ் பாதிக்க பட்ட மக்கள் சாமி சிலையை தொட்டு வணங்கினால் மற்ற பக்தர்களுக்கும் பரவி பாதிப்பை இன்னும் தீவிரம் அடைய செய்யும். அதனால் தான் கோவில் நிர்வாகம் இந்த முடிவு எடுத்து முக கவசம் அணிந்துள்ளோம் என்று கூறுகிறார்.

கடவுள் சிலைக்கு மட்டும் இன்றி அர்ச்சகர்களும் முகக்கவசத்துடன் தான் கோவிலுக்கு வரவேண்டும் எனவும், கோவிலுக்கு வரும் பக்தர்களும் முகக்கவசம் அணிந்து வருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags : #CORONOVIRUS