'காதலிக்கு கல்யாணம் என கேள்விப்பட்டு...' 'ரெண்டு பேரும் சேர்நது எடுத்த போட்டோவ...' பேசுறத கம்மி பண்ணினதால காதலன் ஆத்திரம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வெளிநாட்டில் வேலை கிடைத்ததால் காதலனுடன் பேச்சை குறைத்த காதலியின் வீடியோ, போட்டோக்களை வெளியிடுவதாக சொன்ன இளைஞர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அழகியபாண்டிபுரம் காட்டுப்புதூரைச் சேர்ந்த மர்பின் தனேஷ் (26) என்பவர் அஞ்சுகிராமம் அருகே ஒசரவிளை பகுதியைச் சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தனேஷ் காதலிக்கு குவைத்தில் நர்ஸாக பணிபுரிய வேலை கிடைத்து வெளியூர் சென்றுள்ளார்.
இந்நிலையில் அப்பெண்ணின் தாயார் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் தனேஷ் மீது புகார் அளித்துள்ளார். அதில் அழகியபாண்டிபுரம் காட்டுப்புதூரைச் சேர்ந்த மர்பின் தனேஷ்(26) என்பவர் தன் 26 வயதான மகளை திருமணம் செய்வதாக கூறி காதலித்து அவருடன் நெருங்கிப் பழகியுள்ளார். தற்போது அவர்கள் இருவரும் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பரப்ப போவதாக மிரட்டி வருகிறார். என் மகள் குவைத்தில் நர்ஸாக வேலை செய்து வருவதால் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்து மிரட்டுவதாகவும், அதனை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டுவதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
புகாரை ஏற்ற போலீசார் தனேஷ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். விசாரணையில் மேலும் பல தகவல்களை அளித்துள்ளார் தனேஷ்.
கடந்த 2018 ஆம் ஆண்டு நாகர்கோவிலில் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரிந்து வந்திருக்கிறார் தனேஷ் காதலித்த பெண். அப்போது தான் முகநூல் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதல் வரை நீண்டுள்ளது. மேலும் மர்பின் தனேஷ் அந்தப் பெண்ணுக்கு உறவினர் என்கிறார்கள்.
அவர்கள் காதலித்த நேரத்தில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்துள்ளார். இதனிடையே அந்தப் பெண்ணுக்கு குவைத்தில் நர்ஸ் வேலை கிடைத்து, அவர் வெளிநாடு செல்ல தனேஷும் உதவி புரித்துள்ளதாக கூறியுள்ளார். அதன் பின் இருவரும் வாட்ஸப் மூலம் பேசிவந்துள்ளனர்.
தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நிலையில், தனேஷிடம் பேசுவதை குறைத்துள்ளார். அப்போது தான் அவரின் காதலிக்கு அருமனை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மர்பின் தனேஷ், அந்தப் பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை அருமனையைச் சேர்ந்த இளைஞருக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும், அந்தப் பெண்ணைக் காதலித்தது குறித்தும் அந்த இளைஞரிடம் கூறியிருக்கிறார் என விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

மற்ற செய்திகள்
