'நான் என் காதலியை கொன்னுட்டேன்...' 'கடைசியில அவ என்கிட்டே என்னமோ சொல்ல வந்தா, ஆனால்...' கொரோனா வைரஸை தனக்கு பரப்பியதாக காதலன் வெறிச்செயல்...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Apr 02, 2020 05:18 PM

"என் காதலி எனக்கு கொரோனா வைரஸை தந்துவிட்டு போய்விட்டாள். அதனால்தான் அவளுடைய கழுத்தை நெரித்து கொன்றுவிட்டேன்" என்று ஒரு ஆன் நர்ஸ் வாக்குமூலம் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது.

The lover killed the girl claimed to have spread the corona virus

கொரோனா வைரஸின் தாக்கத்தில் சின்னாபின்னமாக ஆகி அதிக உயிர்பலிகளை வாங்கிக்கொண்டிருக்கும் இத்தாலியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று காலை ஏழு மணிக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு போன் வந்துள்ளது. அதில் பேசிய நபர். "என் பேர் அந்தோனியா, நான் ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறேன், நான் என் உயிருக்கு உயிரான காதலியை கொன்றுவிட்டேன்" என்று வீட்டு முகவரியையும் சொல்லி போனை வைத்துவிட்டார்.

இந்த நிலையில், போலீசார் உடனே இளைஞரின் வீட்டிற்கு விரைந்து சென்றனர். அங்கு ஒரு இளம்பெண் சடலமாக கிடந்தார். உடனே அந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். அந்தோனியாவை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின் பொது அந்தோனியா கூறிய தகவல்கள் அதிர்ச்சியை போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வாக்குமூலத்தில்  கூறியிருப்பதாவது "என் காதலி பெயர் குவாரண்டினா, வயது 21 ஆகிறது, அவள் ஒரு மருத்துவர். நானும் என் காதலியும் ஒரே மருத்துவமனையில் தான் வேலை பணிபுரிகிறோம். ஆயிரக்கணக்கானோர் இந்த மருத்துவமனையில் வைரஸ் தாக்கி மரணமடைந்து விட்டனர். நாங்கள் எங்கள் பணியை சேவையாக நினைத்து செய்தோம்.

ஆனால் குவாரண்டினா ஒருநாள் என்னிடம் வந்து, தன்னையும் அறியாமல் எனக்கு கொரோனா வைரஸை பரப்பிவிட்டதாக சொன்னாள். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்போது ஏற்பட்ட கோவம் எனக்கு வெறியானது. அதனால்தான் குவாரண்டினாவின் என் கையாலேயே கழுத்தை நெரித்து கொலை செய்தேன். உயிர் போகும் வேளையில் அவள் எதையோ சொல்ல வந்தாள். ஆனால் சொல்ல விடாமல் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டேன்." என்று தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது. அப்போது மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அந்தோனி மற்றும் குவாரண்டினா இருவருக்குமே கொரோனா வைரஸ் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. பரிசோதனை செய்து பார்க்காமல் கொரோனா வைரஸ் பரப்பியதாக காதலி சொன்னதுமே ஆத்திரத்தில் கொலை செய்துள்ளார். இப்போது அந்தோனியா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். ஒருவேளை கடைசியில் உயிர் போகும் முன் தனக்கு கொரோனா இல்லை என்பதை தான் குவாரண்டினா சொல்ல வந்திருப்பாரோ என நினைத்து வேதனையில் உள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CORONAVIRUS #LOVE